பிரபுதேவா நடிக்க சௌந்தர்யா ரஜினிகாந்த் தயாரிக்கும் படம் -என்ன டைட்டில் தெரியுமா ?
வெற்றிபெற்ற ‘வித் லவ்’ என்ற படத்தை தொடர்ந்து சீயோன் பிலிம்ஸ் சார்பில் சவுந்தர்யா ரஜினிகாந்த், எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் சார்பில் பசிலியான் நாசரேத், மகேஷ் ராஜ் பசிலியான் இணைந்து தயாரிக்கும் காதல் கதை கொண்ட படம், ‘கமல் ஸ்ரீதேவி’. பிரபுதேவா, சிம்ரன், மிதுன் ஜெய்சங்கர், ஸ்மேகா நடிக்கின்றனர். மூணாறு, சென்னை யில் படப்பிடிப்பு நடந்தது. கிருஷ்ணா னந்த் கொட்டாரப்பட்டு எழுதி இயக்கு கிறார். ஜி.வி.பிரகாஷ் குமார் இசை அமைக்க, சரண் வேலாயுதன் ஒளிப்பதிவு செய்கிறார். ராஜீவன் தயாரிப்பு வடிவமைப்பு மேற்கொள்கிறார். ராஜா ஆறுமுகம் எடிட்டிங் செய்கிறார். சேகர் அரங்குகள் அமைக்க, மகேஷ் மேத்யூ சண்டைப் பயிற்சி அளிக்க, சரத் ஜே.சாமுவேல் இணை தயாரிப்பு செய்கிறார்.
வெற்றிபெற்ற ‘குட் நைட்’, ‘லவ்வர்’, ‘டூரிஸ்ட் ஃபேமிலி’, ‘வித் லவ்’ ஆகிய தமிழ் படங்களை தொடர்ந்து எம்ஆர்பி எண்டர்டெயின்மெண்ட் தயாரிக்கும் ‘கமல் ஸ்ரீதேவி’ என்ற படத்தை சீயோன் பிலிம்சுக்காக சவுந்தர்யா ரஜினிகாந்த் இணைந்து வழங்குகிறார். ரஜினிகாந்தின் மகள் சவுந்தர்யா இணைந்துள்ள படத்துக்கு ‘கமல் ஸ்ரீதேவி’ என்று பெயரிடப்பட்டுள்ள நிலையில், ரசிகர்கள் மத்தியில் அதிக எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது.

