கார் ரேஸிங் வீரர்களுடன் ஜாலி பயிற்சி.. நடிகர் அஜித்தின் வீடியோ வைரல்...!

ak

நடிகர் அஜித் துணிவு திரைப்படத்தின் மாபெரும் வெற்றிக்குப் பிறகு விடா முயற்சி மற்றும் குட் பேட் அக்லி ஆகிய படங்களில் நடித்து முடித்து இருக்கிறார். மேலும் இந்த இரண்டு படங்களின் டப்பிங் பணிகளையும் நிறைவு செய்துள்ளார் அஜித். எனவே இந்த இரண்டு படங்களும் அடுத்தடுத்து வெளியாக தயாராகி வருகின்றன. அதன்படி விடாமுயற்சி திரைப்படம் இந்த மாதம் இறுதியில் வெளியாகும் என சொல்லப்படுகிறது. குட் பேட் அக்லி திரைப்படம் 2025 ஏப்ரல் மாதம் 10ஆம் தேதி திரைக்கு வரும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதற்கிடையில் நடிகர் அஜித், கார் ரேஸிங் அணி ஒன்றை தொடங்கி அதன் மூலம் இந்த மாதம் துபாயில் நடைபெற இருக்கும் கார் ரேஸிங்கில் கலந்து கொள்ள இருக்கிறார். நடிகர் அஜித் 15 வருடங்கள் கழித்து ரேஸிங்கில் கலந்து கொள்ள இருப்பது ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது. மேலும் அதற்காக தனது உடல் எடையையும் கணிசமாக குறைத்து பயிற்சிகளையும் மேற்கொண்டு வருகிறார் அஜித்.


சமீபத்தில் தான் குடும்பத்துடன் புத்தாண்டு கொண்டாட்டத்தை முடித்துவிட்டு சிங்கப்பூரிலிருந்து சென்னை திரும்பிய அஜித், உடனடியாக துபாய் புறப்பட்டு சென்றார். இந்நிலையில் துபாயில் தனது அணியை சேர்ந்தவர்களுடன் அஜித் இருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் வைரலாகி வருகிறது. இந்த வீடியோவை பார்த்த ரசிகர்களும் சமூக வலைதளங்களில் பகிர்ந்து வருகின்றனர்.

Share this story