‘ஓ மை கடவுளே’ பட இயக்குநருடன் கூட்டணி போடும் ‘பிரதீப் ரங்கநாதன்’.

photo

இயக்குநராக களமிறங்கி தற்போது நடிகராக அசத்தி வரும் பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் குறித்த அப்டேட் வந்துள்ளது.

photo

ஜெயம் ரவி நடிப்பில் வெளியாகி ‘கோமாளி’ படத்தை இயக்கி சினிமாவுக்குள் நுழைந்தவர் பிரதீப் ரங்கநாதன். இவர் அடுத்த லவ் டுடே எனும் மாஸ் ஹிட்டான படத்தை இயக்கி, நடித்து நடிகராக அறிமுகமானார். இந்த நிலையில் தற்போது இயக்குநர் விக்னேஷ் சிவனுடன் கைகோர்த்து எல்.ஐ.சி அதாவது ‘லவ் இன்சூரன்ஸ் கார்ப்பரேஷன்’ என்ற படத்தில் நடிக்க உள்ளார். இப்படி தனது சினிமா வாழ்வில் அடுத்தடுத்து ஏறுமுகத்தை சந்திக்கும் பிரதீப் அடுத்து ‘ஓ மை கடவுளே’ பட இயக்குநரான அஸ்வந்த் மாரிமுத்து இயக்கத்தில் புதிய படத்தில் நடிக்க உள்ளதாகவும், படத்தை ஏஜிஎஸ் தயாரிக்க உள்ளதாகவும், அதற்கான பேச்சுவார்த்தை நடந்து வருவதாகவும் தகவல் கசிந்துள்ளது. எல்.ஐ.சி படத்தை முடித்துவிட்டு இந்த படத்தில் நடிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.

Share this story