அமீர்கானை சந்தித்த பிரதீப் ரங்கநாதன்... புகைப்படம் இணையத்தில் வைரல்...!

அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகி உள்ள `டிராகன்' திரைப்படம் நல்ல வரவேற்பைப் பெற்று வருகிறது.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'டிராகன்'. லியோன் ஜேம்ஸ் இசையமைத்த இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் அனைத்து ஷோக்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது.
காமெடி, எமோஷன் கலந்து கருத்து சொல்லியிருக்கிறார் இயக்குநர் அஸ்வத் மாரிமுத்து. இந்த நிலையில் தற்போது நடிகர் அமீர் கானை பிரதீப் ரங்கநாதன் சந்தித்திருக்கிறார்.
இது குறித்து தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ள பதிவில், நான் எப்போதும் சொல்வதைப் போல வாழ்க்கை கணிக்க முடியாதது. உங்களின் அற்புதமான வார்த்தைகளுக்கு நன்றி அமீர் கான் சார். இதை என் வாழ்க்கையில் என்றும் கொண்டாடுவேன்." எனப் பதிவிட்டிருக்கிறார்.