தளபதி விஜய்யை சந்தித்தது குறித்து பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சி..!

pradeep ranganathan

தளபதி விஜய் "கலக்குறீங்க ப்ரோ.." என்று தனக்கு வாழ்த்து தெரிவித்ததை இயக்குனரும், நடிகருமான
பிரதீப் ரங்கநாதன் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.  


பிரதீப் ரங்கநாதன் நடிப்பில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் உருவாகியுள்ள ’டிராகன்’ திரைப்படம் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. இந்த படம் 100 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை படைத்துள்ளது. திரையரங்கில் வெளியானதற்கு பிறகு, இந்த படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு பெற்றுள்ளது.


இந்த நிலையில், டிராகன் படக்குழுவினர் மரியாதை நிமித்தமாக நடிகர் விஜய்யை சந்தித்துள்ளனர். இந்த சந்திப்பு குறித்து பிரதீப் ரங்கநாதன்  தனது எக்ஸ் பக்கத்தில் ’விஜய்யை நான் சந்தித்த போது, ‘கலக்குறீங்க ப்ரோ’ என அவர் சொன்னபோது "நான் எப்படி உணர்ந்திருப்பேன் என்பதை நினைத்து பார்த்துக்கொள்ளுங்கள்!" என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், "விஜய்யின் இந்த வார்த்தைகளுக்கு நன்றி! அவருடைய ’சச்சின்’ படத்தின் ரீ-ரிலீஸுக்காக காத்திருக்கிறேன்!" என்று நெகிழ்ச்சியுடன் பதிவிட்டுள்ளார்.


 

Share this story