பிரதீப் ரங்கநாதனனின் அடுத்த படத்தில் 3 கதாநாயகிகளா?

pradeep

கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அதைத்தொடர்ந்து அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் ‘டிராகன்’. ஏ.ஜி.எஸ். தயாரித்திருக்கும் இப்படத்தில்  கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன், கே.எஸ். ரவிக்குமார், கௌதம் வாசுதேவ் மேனன், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர்.  கடந்த மாதம் 21ஆம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கில் வெளியான இப்படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில்  ரூ.100 கோடியை கடந்தது. pradeep

இந்நிலையில், பிரதீப் ரங்கநாதன் அடுத்ததாக மூன்று நடிகைகளுடன் நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. அடுத்து பிரதீப் சுதா கொங்கராவின் உதவி இயக்குநர் கீர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளார்.

மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்க உள்ள இந்த திரைப்படத்தில் அவருக்கு ஜோடியாக பிரேமலு திரைப்பட பிரபலம் மமிதா பைஜு நடிக்கவுள்ளார் என்று கூறப்பட்டது. தற்போது, மேலும் இரண்டு நடிகைகள் இந்த படத்தில் நடிக்கவுள்ளனர் என்று தகவல் வெளியாகி உள்ளது. அதாவது அனு இமானுவேல் மற்றும் சீரியல் நடிகை ஐஸ்வர்யா ஷர்மா நடிக்க உள்ளதாக கூறப்படுகிறது.   

Share this story