பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டிராகன்' படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியானது
1740306583559

பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டிராகன்' படத்தின் ஸ்னீக் பீக் காட்சி வெளியாகி உள்ளது.
இயக்குநர் அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியான திரைப்படம் 'டிராகன்'. லியோன் ஜேம்ஸ் இசையமைத்த இந்த படத்தை ஏ.ஜி.எஸ். நிறுவனம் தயாரித்துள்ளது. திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் பெரும்பாலான திரையரங்குகளில் அனைத்து ஷோக்கள் ஓடிக்கொண்டு இருக்கிறது.
இந்நிலையில் படத்தின் ஸ்னீக் பீக் காட்சியை படக்குழு வெளியிட்டுள்ளது. அதில் பிரதீப் ரங்கநாதன் அவரது நண்பர்களிடம் காசு வாங்கி அதை சம்பளமாக அவரின் பெற்றோரிடம் கொடுக்கும் காட்சி இடம்பெற்றுள்ளது.