பிரதீப் ரங்கநாதன் நடித்த 'டிராகன்' பட டிரெய்லர் அப்டேட்

பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள 'டிராகன்' படம் வருகிற 21-ந் தேதி வெளியாக உள்ளது.
தமிழ் சினிமாவில் 'கோமாளி' படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் பிரதீப் ரங்கநாதன், 'லவ் டுடே' படத்தில் கதாநாயகனாக நடித்து ரசிகர்களை கவர்ந்தார். இதைத் தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் `லவ் இன்சூரன்ஸ் கம்பெனி' என்ற படத்திலும் அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில் 'டிராகன்' படத்திலும் நடித்துள்ளார்.ஏஜிஎஸ் நிறுவனம் தயாரிக்கும் டிராகன் படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசை அமைத்திருக்கிறார். இப்படத்தில் கயடு லோஹர், விஜே சித்து, ஹர்ஷத் மற்றும் பிரபல இயக்குனர்களான மிஷ்கின், கவுதம் வாசுதேவ் மேனன், மரியம் ஜார்ஜ், சித்ரா முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
Dragon Trailer tomorrow 5 pm♥️ pic.twitter.com/7dZrzkSAWu
— Ashwath Marimuthu (@Dir_Ashwath) February 9, 2025
இப்படம் வருகிற 21-ம் தேதி வெளியாக உள்ளது. இதற்கிடையில் இப்படத்தின் அடுத்தடுத்த பாடல்கள் வெளியாகி வைரலாகின. இந்த நிலையில் தற்போது இப்படத்தின் டிரெய்லர் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. அதன்படி இப்படத்தின் டிரெய்லர் நாளை மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது.