ஹிந்தியில் வெளியாகும் பிரதீப் ரங்கநாதனின் 'டிராகன்'...!

பிரதீப் ரங்கநாதன் நடிப்பில் வெளியாகியுள்ள டிராகன் படம் ஹிந்தியில் வெளியாகவுள்ளது.
இயக்குநர் அஷ்வத் மாரித்து மற்றும் பிரதீப் ரங்கநாதன் கூட்டணியில் உருவாகி வெளியான திரைப்படம் 'டிராகன்’. லியோன் ஜேம்ஸ் இந்தப் படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்தப் படத்தில் அனுபமா பரமேஸ்வர், கயாடு லோஹர், மிஷ்கின் உள்ளிட்ட பலர் நடித்துள்ளனர். ஏ.ஜி.எஸ். நிறுவனம் இந்தப் படத்தை தயாரித்துள்ளது. இந்தப் படம் கடந்த பிப்ரவரி 21-ம் தேதி தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் திரையரங்குகளில் வெளியானது.
I'm super excited for this! Thank you for the love and for proving that good content will always win across languages. After the terrific response, we are bringing #ReturnOfTheDragon in Hindi. ❤️🙏🧿 https://t.co/cS0R87XDUG
— Archana Kalpathi (@archanakalpathi) March 8, 2025
திரைப்படம் வெளியாகி மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. தற்போது வரை இந்தப் படம் ரூ.150 கோடி வசூலை பெற்றுள்ளதாக கூறப்படுகிறது. இந்நிலையில் 'டிராகன் படம் ஹிந்தியில் மார்ச் 14ஆம் தேதி வெளியாக உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தற்போது, ஹிந்தி ட்ரைலர் வெளியிடப்பட்டுள்ளது.