பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்' படத் தலைப்புக்கு எதிர்ப்பு..!

pradeep

 பிரதீப் ரங்கநாதனின் ‘டியூட்' படத் தலைப்புக்கு எதிர்ப்பு எழுந்துள்ளது. 


நடிகர் பிரதீப் ரங்கநாதன், ‘டிராகன்' பட வெற்றிக்குப் பிறகு மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் படத்தில் நடிக்கிறார். இதில் மமிதா பைஜு நாயகியாக நடிக்கிறார். சரத்குமார், ரோகிணி உள்பட பலர் நடிக்கின்றனர். கீர்த்தீஸ்வரன் இயக்குகிறார். இப்படத்துக்கு ‘டியூட்' என்று பெயரிடப்பட்டுள்ளது. சமீபத்தில் இதன் டைட்டில் தோற்றம் வெளியிடப்பட்டது.இந்தப் படம் தமிழ், தெலுங்கு உள்பட 5 மொழிகளில் வெளியாகிறது. இந்நிலையில் இந்தப் படத்தின் தலைப்பு தன்னுடையது என்று தெலுங்கு நடிகரும் இயக்குநருமான தேஜ் கூறியுள்ளார்.

pradeep

அவர் கூறும்போது, “ஒரு வருடத்துக்கு முன்பே ‘டியூட்' படத்தை அறிவித்து விட்டோம். மைத்ரி மூவி மேக்கர்ஸ் அதே தலைப்பை வைத்திருப்பது அதிர்ச்சியாக இருக்கிறது. மைத்ரி போன்ற முன்னணி தயாரிப்பு நிறுவனத்தை எதிர்க்கும் எண்ணம் எனக்கு இல்லை. ஆனால் இந்த விஷயத்தை அவர்கள் கவனத்துக்குக் கொண்டு சென்றுவிட்டேன்.” என்று தெரிவித்துள்ளார்.தேஜ், கால்பந்தை மையமாக வைத்து உருவாக்கியுள்ள படத்துக்கு ‘டியூட்' என்று தலைப்பு வைத்துள்ளார். இதை தெலுங்கு, கன்னடம், மலையாள மொழிகளில் உருவாக்கியுள்ளார்.

Share this story