பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படம் பூஜையுடன் தொடக்கம்...!

பிரதீப் ரங்கநாதனின் அடுத்த படத்தின் படபடப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியுள்ளது.
கோமாளி படத்தின் மூலம் இயக்குநராக அறிமுகமாகி, பின் லவ் டுடே படத்தின் மூலம் ஹீரோவாக என்ட்ரி கொடுத்தவர் பிரதீப் ரங்கநாதன். அஷ்வத் மாரிமுத்து இயக்கத்தில் பிரதீப் ரங்கநாதன் நடித்த படம் ‘டிராகன்’ படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வசூலில் ரூ.100 கோடியை கடந்தது. அதனை தொடர்ந்து விக்னேஷ் சிவன் இயக்கத்தில் லவ் இன்சூரன்ஸ் கம்பெனி என்ற படத்தில் நடித்து வருகிறார்.
Beginning the BANGER OF A PROJECT on an auspicious note ✨
— Mythri Movie Makers (@MythriOfficial) March 26, 2025
Clicks from the Pooja Ceremony of #PR04 ❤️🔥
Watch the highlights from the Pooja Ceremony. Don't miss the #FirstShot Boom at the end 💥💥
▶️ https://t.co/jJPJVBOEXE
Shooting in progress ❤🔥
⭐ing 'The Sensational'… pic.twitter.com/Ug7DibdQ8H
இந்த நிலையில், நடிகரும் இயக்குனருமான பிரதிப் ரங்கநாதன் அடுத்ததாக சுதா கொங்கராவின் உதவி இயக்குனர் கிர்த்திஸ்வரன் இயக்கத்தில் நடிக்க உள்ளதாக தகவல் வெளியானது. மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு பூஜையுடன் இன்று தொடங்கியது.
#PR04 #FirstShotBoomhttps://t.co/yK62Sp1oh5
— Pradeep Ranganathan (@pradeeponelife) March 26, 2025
இப்படத்தில் மமிதா பைஜு, சரத்குமார் உள்ளிட்டோர் நடிக்கவுள்ளனர். சாய் அபயங்கர் இசையமைக்கவுள்ளார்.