ட்ராகன் படத்தின் வெற்றி விழா-ஹீரோ பிரதீப் ரெங்கநாதன் என்ன பேசினார் தெரியுமா ?

dragon
ஏ ஜி எஸ் என்டர்டெயின்மென்ட் நிறுவனத்தின் சார்பில் கல்பாத்தி எஸ். அகோரம், கல்பாத்தி எஸ். கணேஷ், கல்பாத்தி எஸ். சுரேஷ் தயாரிப்பில், கிரியேட்டிவ் புரொடியுசர் அர்ச்சனா கல்பாத்தி, அசோசியேட் கிரியேட்டிவ் புரொடியுசர் ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோரின் வழிகாட்டலில், அஸ்வத் மாரிமுத்து இயக்கத்தில், பிரதீப் ரங்கநாதன், கயாடு லோஹர், அனுபமா பரமேஸ்வரன் - கே எஸ் ரவிக்குமார், மிஷ்கின் உள்ளிட்டோர் நடித்து வெளியான 'டிராகன்' திரைப்படம் ரசிகர்களின் பேராதரவுடன் நூறாவது நாளைக் கடந்து வெற்றிகரமாக ஓடிக்கொண்டிருக்கிறது. 
இப்படத்தின் 100வது நாள் வெற்றிவிழாவில் பிரதீப் ரங்கநாதன் பேசியதாவது: அஷ்வத் மாரிமுத்து ஒரு கதை சொன்னபோது, ‘ஹீரோவாக மட்டுமே நடிப்பேன்’ என்று சொன்னேன்.
அப்போது நான் ‘கோமாளி’யை இயக்கவில்லை, ‘லவ் டுடே’விலும் நடிக்கவில்லை. என்றாலும், என்மீது அவர் அதிக நம்பிக்கை வைத்தார். பிறகு ‘டிராகன்’ உருவாகி ஹிட்டானது. நடித்தால் ஹீரோவாகத்தான் நடிப்பேன் என்று என்மீது நான் வைத்த நம்பிக்கை, இப்போது ரசிகர்களின் பேராதரவால் நிறைவேறியுள்ளது. ‘கோமாளி’, ‘லவ் டுடே’, ‘டிராகன்’ என்று, தொடர்ந்து எனக்கு 3வது 100 நாட்கள் படம் அமைந்ததை நினைத்து சந்தோஷமாக இருக்கிறது. இந்த வெற்றியை தொடர்ந்து ரசிகர்கள் என்னை மிகவும் உயர்ந்த இடத்துக்கு அழைத்துச் சென்றுள்ளனர். இதற்காக அவர்களுக்கு என்றென்றும் நன்றியுள்ளவனாக இருப்பேன்.

Share this story