துப்பாக்கியுடன் மிரட்டும் பிரஜன்.. ‘டி3’ படத்தின் ரிலீஸ் அறிவிப்பு !

D3

பிரஜன் நடிப்பில் உருவாகியுள்ள ‘டி3’ படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. 

பிரபல சீரியல் நடிகர் பிரஜன் நடிப்பில் உருவாகியுள்ள திரைப்படம் ‘டி3’. இந்த படத்தில் வித்யா பிரதீப் கதாநாயகியாக நடித்துள்ளார். இவர்களுடன் நடிகர்கள் சார்லி, வர்கீஸ் மேத்யூ, மோகமுள் அபிஷேக் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.

D3

இந்த படத்தை அறிமுக இயக்குனர் பாலாஜி இயக்கியுள்ளார்.ஸ்ரீஜித் எடவானா என்பவர் இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். உண்மை சம்பவத்தின் அடிப்படையில் த்ரில்லர் படமாக இப்படம் உருவாகியுள்ளது. ஒரே நாளில் நடக்கும் சம்பவங்களை வைத்து இப்படம் உருவாகியுள்ளது. பீமாஸ் எண்டர்டெயின்மெண்ட்ஸ் மற்றும் ஜேகேஎம் புரொடக்ஷ்ன்ஸ் இணைந்து இப்படத்தை தயாரித்துள்ளனர். 

சமீபத்தில் இப்படத்தின் டீசர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் இப்படத்தின் ரிலீஸ் குறித்த அறிவிப்பு வெளியாகியுள்ளது. அதன்படி இப்படம் வரும் மார்ச் 17-ஆம் தேதி வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதையொட்டி பிரஜன் துப்பாக்கியுடன் இருக்கும் போஸ்டர் வெளியிடப்பட்டுள்ளது. 

Share this story