'நடிச்சது போதும்.. நெக்ஸ்ட்..‘ மோடி- விஷாலை வச்சு செஞ்ச பிரகாஷ் ராஜ்....

photos

மோடி - விஷால் இடையே நடந்த  ட்விட்டர் உரையாடலை பிரபல நடிகரான பிரகாஷ் ராஜ் தனது பாணியில் நோஸ்கட் செய்துள்ளார்.

photos

விஷால் நடிப்பில் உருவாகியுள்ள ‘லத்தி’ திரைப்படம் ரிலீசுக்கு தயாராகி வருகிறது. தொடர்ந்து  மார்க் ஆண்டனி, துப்பறிவாளன் 2 ஆகிய படங்களை கைவசம் வைத்துள்ளார். விஷாலின்  இரும்புத்திரை படத்துக்கு பின்னர் இவர் நடிப்பில் வெளிவந்த எந்த படங்களும் எதிர்பார்த்த வரவேற்பை வெறவில்லை. அதனாலேயே தற்பொழுது தயாராகி வரும் படங்களில் ஹிட் கொடுக்க வேண்டும் என்ற முனைப்பில் தீயாக வேலை செய்து வருகிறார் விஷால்.

photos

இதுதவிர லோகேஷ் விஜய் கூட்டணியில் தயாராக உள்ள "தளபதி 67’’ படத்திலும் விஷாலை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடைபெற்று வருகிறது. அது ஒரு புறம் இருக்க சமீபத்தில் நடிகர் விஷால் காசி பயணம் மேற்கொண்டிருந்தார். அங்கு சென்றபோது சிறப்பான தரிசனம் கிடைத்ததாகவும், காசியை இந்த அளவுக்கு அழகாக மாற்றியதற்கு நன்றி என குறிப்பிட்டு பிரதமர் மோடி ஜி-யை டேக் செய்து பாராட்டி இருந்தார் விஷால். இதற்கு பிரதமர் மோடியும்தங்களுக்கு காசியில் சிறப்பான அனுபவம் கிடைத்ததை அறிந்து மகிழ்ந்தேன்” என ரிப்ளை செய்திருந்தார்.


மோடி - விஷால் இடையேயான இந்த உரையாடலை பிரபல நடிகரான பிரகாஷ் ராஜ் கிண்டலடிக்கும் விதமாக பதிவு ஒன்றை போட்டுள்ளார். அதாவது விஷாலின் டுவிட்டர் பதிவை குறிப்பிட்டு “shot ok... next" என பதிவிட்டுள்ளார். இதன்மூலம் இருவரும் சிறப்பாக நடிக்கிறார்கள் என அவர் கிண்டலடித்துள்ளார்.  பிரகாஷ் ராஜின் இந்த டுவிட்டர் பதிவு வைரலாகி வருகிறது.

Share this story