ராயன் பட இயக்குநர் தனுஷுக்கு நன்றி தெரிவித்த பிரகாஷ் ராஜ்
1722075626000
நடிகர் தனுஷ் இயக்கி நடித்துள்ள ராயன் படம் நேற்று திரையரங்குகளில் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தனுஷின் 50 ஆவது படமான இதை சன் பிக்சர்ஸ் தயாரித்துள்ளது. இந்த படத்தில் எஸ்.ஜே.சூர்யா, செல்வராகவன், பிரகாஷ்ராஜ், காளிதாஸ் ஜெயராம், சுதீப் கிசன், துஷாரா விஜயன் என நட்சத்திர பட்டாளத்தையே களமிறக்கியுள்ளார் தனுஷ். ஏ.ஆர்.ரகுமான் இசையில் இப்படத்தின் பாடல்களுக்கு ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது.
இந்நிலையில், "ராயன் படக்குழுவினரின் புகைப்படத்தை தனது எக்ஸ் பக்கத்தில் நடிகர் பிரகாஷ் ராஜ் பகிர்ந்துள்ளார். அந்த பதிவில், "ராயன் படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பார்த்து மகிழ்ச்சியடைகிறேன். ராயன் பட இயக்குநர் தனுஷுக்கும் ரசிகர்களுக்கும் நன்றி" என்று பதிவிட்டுள்ளார்.