கோல்டன் விசா பெற்ற பிரசன்னா - சினேகா ஜோடி... ஐக்கிய அமீரகம் வழங்கிய புதிய அங்கீகாரம் !
நடிகர் பிரசன்னா - சினேகா ஜோடிக்கு ஐக்கிய அமீரகம் கோல்டன் விசா வழங்கி கௌரவித்துள்ளது.
தமிழ் சினிமாவில் முன்னணி நடிகையாக இருந்தவர் நடிகை சினேகா. ஏராளமான வெற்றி திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றுள்ளார். தமிழை தாண்டி மலையாளம் மற்றும் தெலுங்கு படங்களிலும் நடித்துள்ளார். தமிழ் சினிமாவில் கவர்ச்சி காட்டாமல் குடும்ப பாங்காகவே நடித்து ரசிகர்களின் அன்பை பெற்றுள்ளார்.
நடிகர் பிரசன்னாவை நீண்ட நாட்களாக காதலித்து வந்த சினேகா, கடந்த 2012-ஆம் ஆண்டு திருமணம் செய்துக்கொண்டார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். தற்போது சினிமாவில் பெரிதாக படங்கள் நடிக்கவில்லை என்றாலும் திரையுலகில் நட்சத்திர தம்பதியாக வலம் வருகின்றனர்.
இந்நிலையில் நடிகை சினேகா மற்றும் நடிகர் பிரசன்னா ஜோடிக்கு கோல்டன் விசா வழங்கப்பட்டுள்ளது. பிரபலங்களுக்கு கொடுக்கப்படும் இந்த விசாவை சினேகா - பிரசன்னாவிற்கு கொடுத்து ஐக்கிய அமீரகம் கௌரவப்படுத்தியுள்ளது. கோல்டன் விசா பெற்ற இந்த ஜோடிக்கு ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.