ஹேய் பெண்டாட்டி... சினேகாவிற்காக ரொமான்டிக் பதிவை போட்ட நடிகர் பிரசன்னா !
திருமண நாளையொட்டி சினேகாவிற்கு அவரது கணவர் பிரசன்னா ரொமான்டிக் பதிவு ஒன்றை பதிவிட்டுள்ளார்.
தமிழ் சினிமாவில் நட்சத்திர தம்பதிகளாக இருப்பவர்கள் பிரசன்னா - சினேகா ஜோடி. முன்னணி நடிகர்களாக இருந்த இவர்கள், பல திரைப்படங்களில் இணைந்து நடித்துள்ளனர். கடந்த 2009ம் ஆண்டு வெளியான ‘அச்சமுண்டு அச்சமுண்டு’ படத்தில் நடித்தபோது நடிகர் பிரசன்னாவுடன் சினேகாவிற்கு காதல் மலர்ந்தது. இதையடுத்து இருவரும் திருமணம் செய்துக் கொண்டனர்.
திரையுலகில் ஜொலிக்கும் தம்பதிகளாக வலம் இவர்களுக்கு 7 வயதில் விஹான் என்ற மகனும், ஆதந்த்யா என்ற மகளும் உள்ளனர். திருமணத்திற்கு பிறகு இருவரும் நடித்து வருகின்றனர். தமிழை தாண்டி தெலுங்கு, மலையாள திரைப்படங்களில் இவர்கள் நடித்துள்ளனர். இவர்களுக்கு ஏராளமான ரசிகர்கள் உள்ளனர்.
சமீபத்தில் இந்த ஜோடி பிரியவுள்ளதாக தகவல் வெளியானது. அந்த தகவலை பொய்யாக்கும் வகையில் ரொமான்டிக் பதிவு ஒன்றை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் நடிகர் பிரசன்னா வெளியிட்டுள்ளார். அதில் ஏய் பொண்டாட்டி, இந்த சிறப்பான நாளில் ஒன்றை சொல்ல விரும்புகிறேன். என் வாழ்க்கையில் பல சிறப்புகள் இருந்தாலும் உன் கையை பிடித்த பிறகு நிறைய கற்றுக்கொண்டேன். உன்னுடன் பயணிக்கும் இந்த நாளுக்காக நன்றியுடன் இருப்பேன்.
பல்வேறு கஷ்டங்களையும் சவால்களையும் சந்தித்திருக்கிறேன். அப்போதெல்லாம் நீ என் அருகில் இருந்ததால் எந்த கஷ்டமும் என்னை எதுவும் செய்யவில்லை. உனது அன்பு என்னை வழிநடத்தி செல்கிறது. உண்மை எனது துணையாக பெற்றதற்கு என்றும் நன்றி உள்ளவனாக நான் இருப்பேன். நம்முடைய பிள்ளைகள் விலை மதிப்பற்ற பரிசுகள். எந்த சூழ்நிலையிலும் என்னை விட்டுக் கொடுக்காத அன்பு என்னை நெகிழ வைக்கிறது.
இனிய திருமண நாள் வாழ்த்துக்கள் அன்பே. ஒவ்வொரு நொடியும் நாம் சிறப்பாக வாழ்வோம். உன்னை எப்போதும் நான் காதலிக்கிறேன். நம்முடைய காதல் உயர்ந்ததாக இருக்கும். நம்மை சூழ்ந்த மில்லியன் கணக்கான வதந்திகள் தவுடு பொடியாகட்டும். நம்முடைய வாழ்க்கையை முழுமையாக வாழ்வோம் என்று குறிப்பிட்டுள்ளார்.