நடிகர் பிரசாந்த் நடிக்கும் புதிய படம் -எந்த பட ரீமேக் தெரியுமா ?

Prasanth

நடிகர் பிரசாந்த் வைகாசி பொறந்தாச்சு என்ற படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார் .இவர் நடிகர் மற்றும் இயக்குனர் தியாகராஜனின் மகனாவார் .இவர் தமிழில் மலையூர் மம்பட்டியான் என்ற படத்தில் நடித்த நடிகர் ஆவார் .பிரசாந்த் தமிழில்  முன்பு இயக்குனர் சங்கர் இயக்கத்தில் ஜீன்ஸ் என்ற படத்தில் நடித்துள்ளார் .பின்னர் வின்னர் என்ற படத்திலும் நடித்துள்ளார் .இப்போது இவர் நடிக்கும் புதிய படத்தின் அப்டேட் வெளியாகியுள்ளது 
கடந்த மார்ச் 14ம் தேதி, நானி தயாரிப்பில் வெளியான தெலுங்கு படம் ‘கோர்ட் ஸ்டேட் வெர்சஸ் நோபடி’. மாபெரும் வரவேற்பைப் பெற்ற இப்படத்தின் தமிழ் ரீமேக் உரிமையினைக் கைப்பற்றினார் நடிகர் தியாகராஜன். இதன் பணிகள் நீண்ட மாதங்களாக நடைபெற்று வந்தன. தற்போது இதில் நடிக்கவுள்ள நடிகர்கள் முடிவாகிவிட்டதாக பட வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. ‘கோர்ட்’ படத்தில் வரும் காதலர்கள் கதாபாத்திரத்தில் தயாரிப்பாளர் ஃபைவ் ஸ்டார் கதிரேசனின் மகன் கிருத்திக், தேவயானியின் மகள் இனியா இருவரும் நடிக்கவுள்ளார்கள். பிரியதர்ஷி என்ற வக்கீல் கதாபாத்திரத்தில் பிரசாந்த், சாய்குமார் கதாபாத்திரத்தில் தியாகராஜன் ஆகியோர் நடிக்கவுள்ளதாக கூறப்படுகிறது. இப்படத்தினை தியாகராஜனும், கதிரேசனும் இணைந்து தயாரிக்க முடிவு செய்திருக்கிறார்கள்.

Share this story