அனிரூத்துடன் இணைந்து பாடல் பாடிய விஜய் சேதுபதி.. பிரசாந்தின் ‘அந்தகன்’ குறித்து முக்கிய அப்டேட் !

 anthagan

 பிரசாந்த் நடிப்பில் உருவாகும் ‘அந்தகன்’ படத்திற்காக அனிரூத் மற்றும் விஜய் சேதுபதி இணைந்துள்ளனர். 

டாப் ஸ்டார் பிரசாந்த் நீண்ட இடைவெளிக்கு பிறகு ஹீரோவாக நடித்து வரும் திரைப்படம் ‘அந்தகன்’. இந்தியின் சூப்பர் ஹிட்டடித்த ‘அந்தாதூண்’ படத்தின் ரீமேக்காக இந்த படம் உருவாகி வருகிறது. இந்த படத்தை முன்னணி இயக்குனர் தியாகராஜன் இயக்கி வருகிறார்.

 anthagan

இந்த படத்தில் சமுத்திரகனி, ப்ரியா ஆனந்த், சிம்ரன், கார்த்திக், யோகி பாபு, ஊர்வசி, கே.எஸ்.ரவிக்குமார், மனோபாலா, வனிதா விஜயகுமார், லீனா சாம்சன், செம்மலர், பூவையார் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். கலைப்புலி எஸ் தாணு தயாரிக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு ஏற்கனவே நிறைவுபெற்றுள்ளது. 

 anthagan

ஆனால் இந்த படத்தில் ஒரு பாடலின் படப்பிடிப்பு மட்டும் எடுக்கப்பட உள்ளது. விரைவில் அந்த பாடலுக்கான படப்பிடிப்பு நடைபெறவுள்ளது. இந்த பாடலுக்கு பிரபுதேவா நடனம் அமைக்கவுள்ளார். 50 நடன கலைஞர்கள் ஆடும்  இந்த பாடலுக்காக பிரம்மாண்ட அரங்கம் ஒன்று அமைக்கப்பட்டு வருகிறது.

இந்நிலையில் இந்த பாடலை பிரபல இசையமைப்பாளரான அனிரூத் மற்றும் மக்கள் செல்வர் விஜய் சேதுபதி இணைந்து பாடியுள்ளனர். பிரசாந்தின் ‘அந்தகன்’ படத்திற்காக ‘டோர்ரா புஜ்ஜி‘ என்ற பாடலுக்கு அனிரூத் மற்றும் விஜய் சேதுபதி இணைந்தது எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த பாடலின் படப்பிடிப்பு முடிந்தவுடன் விரைவில் ‘அந்தகன்’ ஆடியோ வெளியீடு நடைபெறவுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Share this story