பிரசாந்த் நீல் - ஜுனியர் என்.டி.ஆர் படத்தின் புதிய அப்டேட்

கே.ஜி.எப் இயக்குனர் பிரசாந்த் நீல் - ஜுனியர் என்.டி.ஆர் படத்தின் புதிய அப்டேட் வெளியாகி உள்ளது.
கே.ஜி.எப் படங்கள் மூலம் இந்திய திரைத்துறையை கர்நாடகாவை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த பிரசாந்த் நீல் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக இயங்கி வருகிறார். பிரசாந்த் நீல் - பிரபாஸ் கூட்டணியில் சலார் இரண்டாம் பாகம் தயாராகி வருகிறது.
இதற்கிடையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகரான ஜூனியர் என்.டி. ஆரின் 31 ஆவது படத்தை பிரசாந்த் நீல் இயக்குவதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருத்தது.
#NTRNeel is entering its most explosive phase 💥💥
— Mythri Movie Makers (@MythriOfficial) April 9, 2025
Man of Masses @Tarak9999 steps into the destructive soil from April 22nd ❤️🔥❤️🔥#PrashanthNeel @MythriOfficial @NTRArtsOfficial @NTRNeelFilm pic.twitter.com/z7hsCkhOY0
பான் இந்தியா படமாக உருவாகும் இதை ரூ. 350 கோடி பட்ஜெட்டில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. ’NTR-31' படம் கடந்த ஜனவரியில் பூஜையுடன் துவங்கியது. இந்நிலையில் ஏப்ரல் 22 ஆம் தேதி இப்படத்தின் படப்பிடிப்பில் ஜூனியர் என்டிஆர் கலந்துகொள்ள உள்ளதாக படக்குழு அறிவித்துள்ளது.இந்த படமானது 2026 ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அறிவித்துள்ளது.அதே நாளில் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.