பிரசாந்த் நீல்- ஜுனியர் என்.டி.ஆர் படத்தின் ரிலீஸ் அப்டேட்...!

பிரசாந்த் நீல்- ஜுனியர் என்.டி.ஆர் கூட்டணியில் உருவாகி வரும் படம் அடுத்த ஆண்டு பொங்கலுக்கு வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
கே.ஜி.எப் படங்கள் மூலம் இந்திய திரைத்துறையை கர்நாடகாவை நோக்கித் திரும்பிப் பார்க்க வைத்த பிரசாந்த் நீல் அடுத்தடுத்த படங்களில் கமிட்டாகி பிசியாக இயங்கி வருகிறார். பிரசாந்த் நீல் - பிரபாஸ் கூட்டணியில் சலார் இரண்டாம் பாகம் சுடசுட தயாராகி வருகிறது. இதற்கிடையில், தெலுங்கு சினிமாவின் முன்னணி கதநாயகன் ஜூனியர் என்.டி. ஆரின் 31 ஆவது படத்தை பிரசாந்த் நீல் இயக்குவதாக மைத்ரி மூவி மேக்கர்ஸ் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்திருத்தது.
KGF, Salaar director Prashanth Neel’s next Pan-India #NTR film to hit screens on January 9, 2026.
— Sreedhar Pillai (@sri50) March 25, 2025
Same day #JanaNayagan release! pic.twitter.com/5vavixf5iq
பான் இந்தியா படமாக உருவாகும் இதை ரூ. 350 கோடி பட்ஜெட்டில் மைத்ரி மூவி மேக்கர்ஸ் மற்றும் என்டிஆர் ஆர்ட்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ளன. NTR-31' படம் கடந்த ஜனவரியில் பூஜையுடன்
துவங்கியது. இந்நிலையில் இந்த படமானது 2026 ஜனவரி 9 ஆம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வ போஸ்டர் வெளியிட்டு அறிவித்துள்ளது. அதே நாளில் நடிகர் விஜய்யின் ஜனநாயகன் படமும் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.