ஹரி இயக்கத்தில் நடிக்கும் பிரசாந்த்..?

இயக்குனர் ஹரி இயக்கத்தில் நடிகர் பிரசாந்த் நடிக்கவுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கடந்த 2002 ஆம் ஆண்டு "தமிழ்" என்ற திரைப்படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர் ஹரி.அந்த படத்தில் பிரசாந்த் ஹீரோவாக நடித்திருந்த நிலையில், தற்போது 23 ஆண்டுகள் கழித்து ஹரி இயக்கும் படத்தில் மீண்டும் பிரசாந்த் நடிக்க இருப்பதாக செய்திகள் வெளியாகி உள்ளன.நாளை பிரசாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு, இந்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகும் என்று கூறப்படுகிறது. அதுமட்டுமின்றி, இந்த படத்தின் நாயகியாக நடிக்க நடிகைகள் காயடு லோஹர் மற்றும் பூஜா ஹெக்டே ஆகிய இருவருடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக கூறப்படுகிறது.
மேலும், பிரசாந்த் இன்னொரு படத்திலும் நடிக்க ஒப்பந்தம் ஆகியிருப்பதாகவும், அந்த படம் குறித்த அறிவிப்பும் நாளை அவரது பிறந்த நாளில் வெளியாகும் என்றும் கூறப்படுகிறது. எனவே, நாளை பிரசாந்த் நடிக்க இருக்கும் இரண்டு திரைப்படங்களின் அறிவிப்புகள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படும் நிலையில், ரசிகர்கள் குஷியாக உள்ளனர்.