'எம்புரான்' படத்தின் ப்ரீ புக்கிங் தொடக்கம்...

மோகன்லால் நடித்துள்ள எம்புரான்' படத்தின் ப்ரீ புக்கிங் தொடங்கியுள்ளது.
நடிகர் பிருத்விராஜ் இயக்கத்தில் மோகன்லால் நடிப்பில் கடந்த 2019-ஆம் ஆண்டு வெளியான படம் 'லூசிஃபர்'. இந்தப் படம் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இதைத் தொடர்ந்து 'லூசிஃபர்' படத்தின் இரண்டாம் பாகம் உருவாக்கப்பட்டுள்ளது. லூசிபர் இரண்டாம் பாகத்துக்கு 'எம்புரான்' என தலைப்பிடப்பட்டுள்ளது. இப்படத்துக்கு முரளி கோபி கதை எழுதியுள்ளார். பிருத்விராஜ் இப்படத்தை இயக்குவதோடு முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
Thrissur Ragam #L2 advance booking 😱
— Kerala Trends (@KeralaTrends2) March 21, 2025
#Empuraan pic.twitter.com/Lg7VdaiPlv
இப்படம், வருகிற மார்ச் மாதம் 27-ந்தேதி மலையாளம், தமிழ், இந்தி,தெலுங்கு மற்றும் கன்னடம் என ஐந்து மொழிகளில் வெளியாகவுள்ளது. இந்நிலையில், படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. தற்போது படத்தின் டிக்கெட் முன்பதிவு தொடங்கியுள்ளது. ரசிகர்கள் முண்டியடித்து கொண்டு டிக்கெட் வாங்க சென்ற காட்சி இணையத்தில் வைரலாகி வருகிறது.