பிரேமம் பட இயக்குனரின் மேஜிக்கில் ரெட்ரோ பட டிரெய்லர்...!

சூர்யா நடித்துள்ள ரெட்ரோ படத்தின் டிரெய்லரை அல்போன்ஸ் புத்திரன் கட் செய்துள்ளதாக படக்குழு தெரிவித்துள்ளது.
கார்த்திக் சுப்புராஜ் இயக்கியுள்ள ரெட்ரோ திரைப்படத்தின் டிரெய்லர் இன்று (ஏப்.18) மாலை வெளியாகவிருக்கிறது. ஆக்ஷன் கலந்த காதல் கதையாக உருவாகியுள்ள ரெட்ரோ படத்தில் பூஜா ஹெக்டே நாயகியாகவும் நாசர், பிரகாஷ் ராஜ், ஜோஜு ஜார்ஜ் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களிலும் நடித்துள்ளனர். சூர்யாவின் 2டி என்டர்டெயின்மென்ட், கார்த்திக் சுப்புராஜின் ஸ்டோன்பென்ச் நிறுவனம் இணைந்து இந்தப் படத்தை தயாரித்துள்ளன.
இப்படத்திற்கு தணிக்கை வாரியம் யு/ஏ சான்றிதழ் வழங்கி இருக்கிறது. 2.48 மணி நேரம்கொண்ட படமாக இது உருவாகியிருப்பதகாவும் கூறப்படுகிறது. இந்நிலையில், நேரம், பிரேமம் என ஹிட் படங்களை இயக்கிய அல்போன்ஸ் புத்திரன் உடல்நிலை காரணமாக தற்போது படங்கள் இயக்குவதில் இருந்து விலகியுள்ளார். கடைசியாக அல்போன்ஸ் புத்திரன் இயக்கிய கோல்டு திரைப்படம் கலவையான விமர்சனங்களைப் பெற்றன.
Trailer for #TheOne cut by The Wild One !!
— karthik subbaraj (@karthiksubbaraj) April 18, 2025
Thank you My Dear Friend @puthrenalphonse 🤗🤗
Felt so happy getting #Retrofied on our Naalaya Iyakkunar Days...❤️#Retro#RetroTrailer#RetroAudioLaunch #LoveLaughterWar #RetroFromMay1 pic.twitter.com/oFlv1juSfB
இந்நிலையில், டிரைலரை பிரேமம் படத்தின் இயக்குநர் அல்போன்ஸ் புத்திரன் கட் செய்திருப்பதாக இயக்குநர் கார்த்திக் சுப்புராஜ் தனது எக்ஸ் பக்கத்தில் தெரிவித்துள்ளார்.