புரொப்போஸ் செய்த ‘பிரேம்ஜி’ – அய்யோ……பாவம்…… ‘என்ன கொடும சார் இது’……….விரக்தியில் பதிவு!

Prem

பாடகர், இசையமைப்பாளர், பாடலாசிரியர், நடிகர் என பன்முகத்திறமை கொண்ட கலைஞராக வலம் வந்துகொண்டிருக்கிறார் ‘பிரேம்ஜி’. அடிக்கடி சர்சையில் சிக்கி கொளவார் பிரேம்ஜி, அதற்கு காரணம், 45 வயதான நிலையிலும் அவர் திருமணம் செய்துகொள்ளாமல் சிங்கிளாக இருப்பதுதான், பலருடம் இவரை வைத்து கிசுகிசு அடிபட்டாலும் சமீபத்தில்  'ஆதலால் காதல் செய்வீர்' மற்றும் 'கில்லாடி' உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய பாடகி வினிதாவை பிரேம்ஜி காதலித்து வருவதாக புகைப்படத்துடன் செய்திகள் வெளியானது.  இந்த நிலையில் இன்ரு காதலர் தினத்தை முன்னிட்டு பிரேம்ஜி புரொப்போஸ் செய்யும் வீடியோ ஒன்றை பகிர்ந்துள்ளார். இந்த வீடியோ வைரலாக பார்க்கப்பட்டு வருகிறது.

Prem

 அந்த வகையில் பிரேம்ஜி யாருக்கு புரொப்போஸ் செய்கிறார் தெரியுமா? “ ஐ லவ் யூ, உன்ன விடமாட்டேன்” என அவர் மது பாட்டிலை பார்த்துதான் புரொபோஸ் செய்கிறார்.  சிறிது நேரம் கழித்து அடுத்த பதிவில் பிப்ரவரி மாதத்தில் 29, 30, 31 தேதிகள யார் நீக்குனாங்களோ, தயவு செய்து 14ம் தேதியையும் நீக்கிடுங்க” என கோபமாக பதிவிட்டுள்ளார். இந்த பதிவும் ரசிகர்கள் மத்தியில் கவனம் பெற்றுள்ளது.


 

Share this story