பிரேம்ஜி நடித்துள்ள 'வல்லமை' படத்திற்கு யு/ஏ சான்று

premji

பிரேம்ஜி நடித்துள்ள வல்லமை படத்திற்கு, தணிக்கை குழு யு/ஏ சான்று வழங்கியுள்ளது. 

தமிழ் சினிமாவில் பிரபல நகைச்சுவை நடிகரும் இசையமைப்பாளருமாக இருப்பவர் பிரேம்ஜி. இவர், தற்போது 'வல்லமை' என்ற திரைப்படத்தில் கதாநாயகனாக நடித்துள்ளார். பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் தயாரித்துள்ள இப்படத்தை கருப்பையா முருகன் எழுதி இயக்கியுள்ளார். திவ்ய தர்ஷினி மற்றும் தீபா சங்கர் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். ஜிகேவி இப்படத்திற்கு இசையமைத்துள்ளார். இந்நிலையில், அண்மையில் இப்படத்தின் டீஸர் வெளியானது.  
இயக்குநர்கள் வெங்கட் பிரபு, லிங்குசாமி, சீனு ராமசாமி ஆகியோர் டீசரை வெளியிட்டனர். 

இந்நிலையில், வல்லமை படத்திற்கு, தணிக்கை குழு யு/ஏ சான்று வழங்கியுள்ளது. 


 

Share this story