பிரேம்ஜிக்கு விரைவில் திருமணம்... மணப்பெண் குறித்த அறிவிப்பு..

நடிகர் பிரேம்ஜி அமரன் இறுதியாக தனது பிரம்மச்சாரி வாழ்க்கைக்கு விடை கொடுக்கும் நேரம் வந்துவிட்டது போல் தெரிகிறது. கோலிவுட்டில் இன்று விடை கிடைக்காத பதில்களில் பிரேம்ஜி எப்போது திருமணம் செய்துகொள்வார் என்பதும் ஒன்றாக இருந்து வந்தது. தற்போது அந்தக் கேள்விக்கு விடாகி கிட்டியுள்ளது. 'ஆதலால் காதல் செய்வீர்' மற்றும் 'கில்லாடி' உள்ளிட்ட படங்களில் பணியாற்றிய பாடகி வினைதாவை பிரேம்ஜி காதலித்து வருகிறார் என்று கூறப்படுகிறது. கூடிய விரைவில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஜனவரி முடிவதற்குள் இருவரின் திருமணமும் கோலாகலமாக நடைபெற உள்ளது. மேலும், 44 வயதை கடந்த பிரேம்ஜிக்கு, 22 வயதுள்ள மணப்பெண்ணா, அதாவது 2கே கிட்டுடடன் பிரேம்ஜி திருமணமா என ரசிகர்கள் இணையதளத்தில் கமெண்ட் செய்து வருகின்றனர்.