பிரேம்ஜியின் வல்லமை பட ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் ரிலீஸ்

பிரேம்ஜி நடிக்கும் வல்லமை படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர் வெளியாகியுள்ளது.
தமிழ் சினிமாவில் நகைச்சுவை மற்றும் குணச்சித்திர கதாப்பாத்திரங்களில் நடிப்பவர் நடிகர் பிரேம்ஜி. இவர் விஜய் நடிப்பில் வெளியான தி கோட் திரைப்படத்தில் நடித்து இருந்தார். அடுத்ததாக பிரேம்ஜி கதாநாயகனாக வல்லமை என்ற திரைப்படத்தில் நடித்துள்ளார். இப்படத்தை பேட்லர்ஸ் சினிமா நிறுவனம் தயாரித்துள்ளது இப்படத்தை கருப்பையா முருகன் எழுதி இயக்கி தயாரித்தும் உள்ளார்.
Happy to launch the first look poster of #VALLAMAI Directed by #KaruppaiyaaMurugan @KMurugan_Dir @Premgiamaren@GKV_music_dir@soorajnallusami@actorrajith@onlynikil#Divyadharshini pic.twitter.com/wY15jwRotN
— PREMGI (@Premgiamaren) January 31, 2025
படத்தின் ஃபர்ஸ்ட் லுக் போஸ்டரை இயக்குனர் வெங்கட் பிரபு அவரது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ளார். டிவிஸ் வண்டியில் ஒரு பள்ளிக்கூட சிறுமியுடன் வண்டியை ஓட்டுகிறார் பிரேஜி போன்ற காட்சிகள் அமைந்துள்ளது. படத்தின் ஒளிப்பதிவை சூரஜ் நல்லுசாமி மேற்கொண்டுள்ளார். ஜிகேவி இப்படத்திற்கு
இசையமைத்துள்ளார். கணேஷ் குமார் படதொகுப்பை செய்துள்ளார். படத்தை பற்றிய மேலும் தகவல்கள் விரைவில் அறிவிக்கப்படும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது.