குபேரா படத்தில் தனுசுக்கு முன்பு நடிக்க இருந்த நடிகர் யார் தெரியுமா ?
1751437099053

சமீபத்தில் வெளியாகி வெற்றி பெற்ற குபேரா படத்தில் தனுஷ் ஹீரோவாக நடித்திருந்தார் .இப்படத்தில் தனுஷுடன் நாகர்ஜுனா, ராஷ்மிகா மந்தனா, சுனைனா, பாக்கியராஜ் என மிகப்பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தது. இப்படத்திற்கு தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைத்து இருந்தார்..இப்படம் தமிழை விட தெலுங்கில் அதிக வசூலை அள்ளியது .இந்த படத்தில் பிச்சைக்காரனாக நடித்திருந்த தனுஷுக்கு தேசிய விருது கூட கிடைக்கும் என்று பல நடிகர்கள் வாழ்த்தி பேசி வந்துள்ளனர் .இந்த படத்தின் ஆடியோ வெளியிட்டு விழாவில் தனுஷின் பேச்சு கூட ஊடகத்தில் வைரலானது .இந்நிலையில் இந்த படத்தில் தனுஷுக்கு முன்பு எந்த ஹீரோவிடம் கதை சொல்லப்பட்டது என்ற தகவல் வெளியாகியுள்ளது
குபேரா படத்தின் கதையை இயக்குனர் சேகர் கம்முலா முதன்முதலில் விஜய் தேவரகொண்டாவிடம் தான் சொன்னாராம். ஆனால் கதை கேட்டுவிட்டு, அவர் தான் பிச்சைக்காரனாக நடித்தால் தன்னுடைய ரசிகர்கள் ஏற்றுக் கொள்ள மாட்டார்கள். அந்த ரோல் தனக்கு செட் ஆகாது என கூறி நடிக்க மறுத்துவிட்டாராம். இதையடுத்து தான் இந்த கதை தனுஷுக்கு சென்றிருக்கிறது. இதை அறிந்த ரசிகர்கள் நல்ல சான்ஸை விஜய் தேவரகொண்டா மிஸ் பண்ணிவிட்டதாக கூறி வருகின்றனர்.