‘பிரின்ஸ்’ படத்தால் ஏற்பட்ட நஷ்டம்... இழப்பீடு கொடுத்த சிவகார்த்திகேயன் !

prince

‘பிரின்ஸ்’ படத்தால் விநியோகஸ்தருக்கு ஏற்பட்ட நஷ்டத்தை சரி நடிகர் சிவகார்த்திகேயன் இழப்பீடு கொடுத்துள்ளார். 

சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி கடந்த தீபாவளிக்கு வெளியான திரைப்படம் பிரின்ஸ். இந்த படத்தை தெலுங்கு இயக்குனர் அனுதீப் இயக்கியிருந்தார்.  தமிழ் மற்றும் தெலுங்கு என இரு மொழிகளில் வெளியான இந்த படத்தை ஸ்ரீ வெங்கடேஸ்வரா சினிமாஸ், சுரேஷ் புரொடக்ஷன்ஸ் மற்றும் சாந்தி டாக்கீஸ் ஆகிய நிறுவனங்கள் இணைந்து தயாரித்திருந்தனர். 

prince

முழுக்க முழுக்க காமெடி ஜோனரில் உருவான இப்படத்தை தமிழகத்தில் பிரபல விநியோகஸ்தர் அன்புசெழியன் வெளியிட்டிருந்தார். இந்த படம் தமிழகத்தில் உள்ள 650 -க்கு மேற்பட்ட திரையரங்குகளில் வெளியிடப்பட்டது. மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்படம் படுதோல்வியை சந்தித்தது. சமூக வலைத்தளங்களில் எதிர்மறை விமர்சனங்களையே பெற்று வசூலில் பின்னடைவை சந்தித்தது. 

இந்நிலையில் இந்த படத்தின் நஷ்டத்தை ஈடுகட்டும் விதமாக தனது பங்காக நடிகர் சிவகார்த்திகேயன் 3 கோடி ரூபாய் கொடுத்துள்ளார். அதேநேரம் பிரின்ஸ் படத்தின் தயாரிப்பு நிறுவனம் சார்பில் 3 கோடி ரூபாய் கொடுக்கப்பட்டுள்ளது. மொத்தத்தில் 6 கோடி ரூபாய் நஷ்ட ஈடாக பட விநியோகஸ்தர் அன்புசெழியனுக்கு கொடுக்கப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. 

 

 

Share this story