சிவகார்த்திகேயன் ட்விட்டர் பதிவால் ; தெரித்து ஓடும் ரசிகர்கள்.

PHOTO
‘பிரின்ஸ்’ திரைப்படம் ஓடிடியில் வெளியாகியுள்ளது.

தீபாவளியை முன்னிட்டு கடந்த மாதம் 21-ஆம் தேதி வெளியான திரைப்படம் ‘பிரின்ஸ்’. இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மோசமான விமர்சனத்தை பெற்றது, தொடர்ந்து படம் பெரும்பாலான திரையரங்குகளை விட்டு ஒரு வாரத்திற்குள்ளாகவே  நீக்கப்பட்டது, இந்த படத்தை பலருமே ‘மிஸ்டர் லோக்கல் 2’ என விமர்சித்தனர்.

photo

சரி தமிழகத்தில் தான் இந்த நிலைமை என தெலுங்கு பக்கம் போய் பார்த்தால் அங்கும் இதே நிலைதான், தெலுங்கில் அறிமுகமான முதல் படத்திலேயே படு தோல்வியை சிவகார்த்திகேயன்  சந்திக்கவே படக்குழு அப்செட் ஆகினர். இந்நிலையில் இப்போது ஒரு மாதம் கழித்துபிரின்ஸ்திரைப்படம் இன்று டிஸ்னி ப்ளஸ் ஹாட்ஸ்டாரில் வெளியாகியுள்ளது

photo

photo

இந்த நிலையில் படம் இன்று ஓடிடி-யில் வெளியாகியுள்ளது என தனது சமூக வலைதள பக்கத்தில் அறிவித்திருந்தார் சிவகார்த்திகேயன். அதற்கு ரசிகர்கள் பல விதமான கமெண்டுகளை பதிவிட்டு வருகின்றனர். அதாவது’பிரின்ஸ்- என சொல்லாதீங்க புரோ ‘மிஸ்டர் லோக்கல் 2’ என சொல்லுங்க’, ‘இந்த படத்த தியேட்டர்ல பாத்ததே போதும்’ என கமெண்ட் செய்து வருகின்றனர்.

photo


 

இன்னும் சிலரோ,’ அடுத்த படம் ஹிட் கொடுக்கலாம், கவலைப்படாதீங்க புரோ’, ‘ மாவீரன் வெற்றி பெற வாழ்த்துக்கள்’ என பாசிட்டிவாக பதிவிட்டு வருகின்றர்.

 

Share this story