பிருத்விராஜ் நடிக்கும் புதிய படத்தின் டைட்டில் அறிவிப்பு
நிசாம் பஷீர் இயக்கத்தில் நடிகர் பிருத்விராஜ் புதிய படத்தில் நடிக்க உள்ளார். நடிகர் பிருத்விராஜ் தமிழில் 'கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை' உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார்.மேலும், பிருத்விராஜ் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இவரது நடிப்பில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியான 'ஆடு ஜீவிதம்' மற்றும் 'குருவாயூர் அம்பலநடையில்' என்ற இரண்டு படங்களும் ரசிகர் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றன. இதற்கிடையில், நடிகர் பிருத்விராஜ் மோகன்லாலை வைத்து லூசிபர் படத்தின் இரண்டாம் பாகமான 'எம்புரான்' படத்தை இயக்கி வருகிறார்.
#Nobody !! #nisambasheer #sameerabdul #SupriyaMenon @E4Emovies @e4echennai @cvsarathi @prithvirajprod @harrisdesom @poffactio pic.twitter.com/ThvZK8iBbe
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) August 27, 2024
#Nobody !! #nisambasheer #sameerabdul #SupriyaMenon @E4Emovies @e4echennai @cvsarathi @prithvirajprod @harrisdesom @poffactio pic.twitter.com/ThvZK8iBbe
— Prithviraj Sukumaran (@PrithviOfficial) August 27, 2024
இந்த படத்திற்கான படப்பிடிப்பு பணிகள் இறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது.இந்தநிலையில், பிருத்விராஜ் ஒரு புதிய படத்தில் நடிக்க உள்ளார். இந்த படத்தினை மம்முட்டி நடிப்பில் வெளியான திரில்லர் படமான 'ரோஷாக்' படத்தை இயக்கிய நிசாம் பஷீர் இயக்க உள்ளார். இ4 என்டர்டெயின்மென்ட் நிறுவனத்துடன் பிருத்விராஜும் இணைந்து இப்படத்தை தயாரிக்க உள்ளார். இப்படத்திற்கு 'நோபடி' என்று டைட்டில் வைக்கப்பட்டுள்ளது. இது குறித்த பதிவை நடிகர் பிருத்விராஜ் தனது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார்.