‘நம்மை ஊக்குவிக்கும் நண்பர்கள்‘... சூர்யா - ஜோதிகா ஜோடியின் புகைப்படத்தை பகிர்ந்த நடிகர் பிரித்விராஜ் !

prithivraj

சூர்யா - ஜோதிகாவை தனது மனைவியுடன் சந்தித்த புகைப்படத்தை நடிகர் பிரித்விராஜ் பகிர்ந்துள்ளார். 

தென்னிந்தியாவில் பிரபல நடிகராக இருப்பவர் பிரித்விராஜ். மலையாள நடிகரான அவர், தமிழ், தெலுங்கு, இந்தி என பல மொழிகளில் பிசியாக நடித்து வருகிறார். கடந்த 2002-ஆம் ‘நந்தனம்’ என்ற மலையாள படத்தின் மூலம் நடிகராக அறிமுகமானார். கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன்பு அவர் இயக்கி நடித்த ‘காட்பாதர்’ திரைப்படம் சூப்பர் ஹிட்டடித்தது.

prithivraj

தமிழில் பாரிஜாதம், மொழி, கண்ணாமூச்சி ஏனடா, நினைத்தாலே இனிக்கும், ராவணன், உருமி உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். இதில் கடந்த 2006-ஆம் ஆண்டு வெளியான திரைப்படம் தான் ‘மொழி’. வித்தியாசமான கதைக்களத்தில் உருவான இப்படத்தில் பிரித்விராஜூக்கு ஜோடியாக ஜோதிகா நடித்திருந்தார். இந்த படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. 

இந்த படத்தின் மூலம் பிரித்ராஜும், ஜோதிகாவும் நீண்ட நாள் நண்பர்களாக உள்ளனர். இந்நிலையில் சூர்யா - ஜோதிகாவுடன் நடிகர் பிரித்விராஜ், தனது மனைவி சுப்ரியாவுடன் சந்தித்த புகைப்படம் ஒன்றை தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளார். அதில் கேப்ஷனாக நம்மை ஊக்குவிக்கும் நண்பர்கள் என்று குறிப்பிட்டுள்ளார். 

 

 

 

 

Share this story