ஆடு ஜீவிதம் படத்திற்காக பல எல்லைகளை கடந்து பணியாற்றினேன் - பிருத்விராஜ்

ஆடு ஜீவிதம் படத்திற்காக பல எல்லைகளை கடந்து பணியாற்றினேன் -  பிருத்விராஜ்

பிரித்திவிராஜ், மலையாளத் திரை உலகில் முன்னணி நடிகர்களில் ஒருவராக வலம் வருபவர். இவர் மலையாளத்தில் மட்டுமில்லாமல் தமிழிலும் சில படங்களில் நடித்து ரசிகர்களிடைய நல்ல வரவேற்பு பெற்றவர். மேலும் இவர் லூசிபர், ப்ரோ டாடி உள்ளிட்ட வெற்றி படங்களை இயக்கி இருந்தார். இவர் தற்போது பிரபாஸ் நடிக்கும் சலார் படத்தில் வில்லனாக நடித்து வருகிறார். பிருத்விராஜ் நடிப்பில் உருவாகியுள்ள மற்றொரு திரைப்படம் ஆடு ஜீவிதம். பென்‌ யாமின்‌ எழுதிய நாவலை மையமாக வைத்து இந்தப் படம் உருவாகியிருக்கிறது. ப்ளஸ்ஸி இந்தப் படத்தை இயக்கியுள்ளார். படத்திற்கு ஏ.ஆர்.ரஹ்மான் இசை அமைத்துள்ளார்

ஆடு ஜீவிதம் படத்திற்காக பல எல்லைகளை கடந்து பணியாற்றினேன் -  பிருத்விராஜ்

இந்நிலையில் படம் குறித்து சமூக வலைதளத்தில் பதிவிட்ட அவர், மனரீதியாகவும், உடல் ரீதியாகவும் ஆடு ஜீவிதம் படத்திற்காக எல்லைகளை தாண்டி பணியாற்றி உள்ளேன். கிட்டத்தட்ட 5 ஆண்டுகளை இப்படத்திற்காக அர்ப்பணித்துள்ளேன். பாகுபலி, கேஜிஎஃப் படங்களுக்கு இணையாக ஆடு ஜீவிதம் திரைப்படம் அமையும் என்பதில் உறுதி என தெரிவித்தார். 

Share this story