கியூட்டான பேபி பம்புடன் பிரியா அட்லீ.

photo

திருமணமாகி 8 வருடத்திற்கு பின் தனது மனைவி கர்பமாக இருப்பதை சமீபத்தில் அறிவித்தார் இயக்குநர் அட்லீ, தொடர்ந்து சீமந்தமும் நடந்து முடிந்தது. தற்போது பிரியா அட்லீ கியூட்டாக பேபி பம்புடன் இருக்கும் வீடியோ வெளியாகி ரசிகர்கலை கவர்ந்துள்ளது.

photo

தெரி, மெர்சல், பிகில் என சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குநர் வரிசையில் இணைந்தவர் அட்லீ. அவர் தற்பொழுது பாலிவுட் பக்கம் சென்று, அங்கு ஷாருக்கனை வைத்து ‘ஜவான்’ படத்தி இயக்கி வருகிறார். இவர் இயக்கம் மட்டுமல்லாமல் தனது மானைவியுடன் இணைந்து ‘A for Apple Productions' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி  தயாரிப்பாளராக சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளனர். இதற்கு முன் கோலிவுட்டில் சிங்கம், நான் மகான் அல்ல உல்ளிட்ட சில படங்களில் நடித்தவர் பிரியா அட்லீ. திருமணத்திற்கு பின் நடிப்பதை நிறுத்திக்கொண்டார்.

photo

இப்படி திரைவாழ்க்கையில் வெற்றியாளராக வலம்வரும் அட்லி தற்பொழுது தனது சொந்த வாழ்க்கையிலும் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார், அந்த வகையில் சமீபத்தில் அட்லி, பிரியா தம்பதி தாங்கள் பெற்றோர் ஆக உள்ள தகவலை புகைப்படத்துடன் ரசிகர்களுக்கு தெரியப்படுத்தினர்.  அதனை தொடர்ந்து ரசிகர்கள், சினிமா பிரபலங்கள் என பலருமே வாழ்த்து தெரிவித்தனர்.  சமீபத்தில் பிரியா அட்லீக்கு வளைகாப்பும் நடந்தது அதில் கோலிவுட்டின் தளபதி நடிகர் விஜய் கலந்து கொண்டு தம்பதியை வாழ்த்திய புகைப்படங்கல், வீடியோ வைரலான நிலையில் தற்போது அட்லீ பிரியாவின் பேபி பம்ப் வீடியோ வெளியாகியுள்ளது. குழந்தை அடுத்த மாதம் பிறக்கவுள்ளது குறிப்பிடத்தக்கது.

Share this story