'பிரியாஅட்லீ'யின் வளைகாப்பு நியூகிளிக்ஸ் – வேறலெவலில் இருக்கும் தம்பதியின் புகைப்படங்கள்.

திருமணமாகி 8 வருடத்திற்கு பின் தனது மனைவி கர்பமாக இருப்பதை அறிவித்த அட்லீ, தொடர்ந்து தனது மனைவிக்காக அழகான பிரம்மாண்டமான வளைகாப்பு நிகழ்ச்சியை நடத்தினார். இது தொடர்பான புதிய புகைப்படங்களை தற்போது அட்லீ-பிரியா தங்களது பக்கத்தில் பகிர்ந்துள்ளனர்.
தெரி, மெர்சல், பிகில் என சூப்பர்ஹிட் படங்களை கொடுத்து முன்னணி இயக்குநர் அட்லீ. அவர் தற்பொழுது பாலிவுட் பக்கம் சென்று, அங்கு ஷாருக்கனை வைத்து ‘ஜவான்’ படத்தி இயக்கியுள்ளார். இவர் இயக்கம் மட்டுமல்லாமல் தனது மானைவியுடன் இணைந்து ‘A for Apple Productions' என்ற தயாரிப்பு நிறுவனத்தையும் தொடங்கி தனது மனைவியுடன் இணைந்து தயாரிப்பாளராக சங்கிலி புங்கிலி கதவ தொற, அந்தகாரம் ஆகிய திரைப்படங்களை தயாரித்துள்ளனர்.
இப்படி திரைவாழ்க்கையில் வெற்றியாளராக வலம்வரும் அட்லிபிரியா தம்பதி தற்பொழுது தங்களது சொந்த வாழ்க்கையிலும் அடுத்த கட்டத்திற்கு சென்றுள்ளார், அந்த வகையில் பிரியா அட்லீக்கு பிரம்மாண்டமாக வளைகாப்பு நடிகர் விஜய் கலந்துகொள்ள நடந்தது. இது தொடர்பான வீடியோ அந்த சமய்த்தில் வெளியாகி வைரலானதும் குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் வளைகாப்பு நிகழ்ச்சியில் எடுத்துக்கொண்ட அட்லீ பிரியாவின் இது வரை காணாத செம கியூட் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.