ஒரே நாள் இரவில் நடக்கும் ‘பிளாக்’

Priya bhavani shankar

‘மாயா, ‘மாநகரம்’, ‘மான்ஸ்டர்’, ‘டாணாக்காரன்’, ‘இறுகப்பற்று’ படங்களைத் தயாரித்த பொட்டன்சியல் ஸ்டூடியோஸ் அடுத்து தயாரித்துள்ள படம், ‘பிளாக்’. கே.ஜி.பாலசுப்ரமணி இயக்கியுள்ள இந்தப் படத்தில் ஜீவா நாயகனாகவும் நாயகியாக பிரியா பவானி சங்கரும் நடித்துள்ளனர். கோகுல் பினாய் ஒளிப்பதிவு செய்துள்ள இந்தப் படத்துக்கு சாம்.சி.எஸ். இசை அமைத்துள்ளார்.

“ஒரே நாள் இரவில் நடக்கும் சம்பவம்தான் படம். இரண்டு கதாபாத்திரங்கள் மட்டுமே பிரதானம். த்ரில்லர் கதையை கொண்ட இதன் படப்பிடிப்பு முடிவடைந்துவிட்டது. நம்மைச் சூழ்ந்திருக்கும் இருளை ‘பிளாக்’ என்று சொல்லலாம். யாரும் எளிதில் புரிந்து கொள்ளாத அளவுக்கு நமது கருப்பு பக்கத்தை வெளிப்படுத்தாமல் இருப்பதையும் ‘பிளாக்’ என்று சொல்லலாம். இதுதான் இந்தப் படத்தின் கதை” என்கிறார், இயக்குநர் கே.ஜி.பாலசுப்ரமணி

Share this story