“அம்மாவுக்கு கேன்சர்….”- கண்கலங்கிய நடிகை ‘பிரியா பவானி சங்கர்’.

photo

கோலிவுட்டில் முன்னணி நடிகைகளுள் ஒருவராக மாறிப்போன நடிகை பிரியா பவானி சங்கர், தனது தாய் கேன்சரால் பாதிக்கப்பட்டது குறித்து உருக்கமாக பேசியுள்ளார்.

photo

தனியார் தொலைக்காட்சியில் செய்தி வாசிப்பாளராக இருந்த இவர், விஜய் டிவியில் ஒளிப்பரப்பானகாதல் முதல் கல்யாணம் வரைசீரியல் மூலம் பிரபலமானவர். அதன்பிறகு வைபவ் நடிப்பில் வெளியான 'மேயாத மான்' படத்தின் மூலம் சினிமாவில் கதாநாயகியாக நடித்தார்.

photo

தொடர்ந்து கடைகுட்டி சிங்கம், மாஃபியா, யானை, ருத்ரன், ஓமணப்பெண்ணே, திருச்சிற்றம்பலம் உள்ளிட்ட படங்களில் நடித்தார். தற்போது கைவசம், இந்தியன் 2, டிமாண்டி காலனி2, தெலுங்கில் 2 படங்கள், விஷாலுடன் இரண்டு படங்கள் என எக்கசக்கமான படங்களை வைத்துள்ளார். இந்த நிலையில் பிரபல ஹோட்டலில் அப்பல்லோ கேன்சர் செண்டர் சார்பாக ஏற்பாடு செய்ப்பப்பட்ட, கேன்சருக்கு எதிராக போராடுபவர்களை ஊக்கப்படுத்தும் நோக்கில் உலக ரோஜா தினத்தை முன்னிட்டு நிகழ்ச்சி ஒன்று ஏற்பாடு செய்யப்பட்டது. அதில் கலந்துக்கொண்டு பேசிய பிரியா “ கடந்த வருடம் எனது அம்மாவுக்கு கேன்சர் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது, அது ஆரம்ப நிலை என்பதால் சீக்கிரம் சரி செய்து விடலாம் என மருத்துவர்கள் கூறினார்கள். இங்கு வந்திருக்கும் பலரும் அவர்களது அனுபவம் குறித்து கூறியது ஊக்கமளிக்கும் விதமாக உள்ளது” என எமோஷனலாக பேசி கண்கலங்கியுள்ளார்.

Share this story