‘ஜவான்’ படத்தில் பிரியாமணி; என்ன செய்ய போறார் தெரியுமா?

PHOTO

ஷாருக்கான் தற்பொழுது அட்லியுடன் கூட்டணி அமைத்து ‘ஜவான்படத்தில் நடித்து வருகிறார். இதற்கு முன்னர் தமிழில் மெர்சல், தெறி,பிகில் உள்ளிட்ட பல திரைப்படங்களை இயக்கி ஹிட் கொடுத்தார் அட்லி, இதை தொடர்ந்து பாலிவுட் பக்கம் சென்றுவிட்டார். 

photo

தற்பொழுது ஷாருக்கானுடன் கைகோர்த்துள்ள அட்லி, இயக்கும் படத்தில் நயன்தாரா,தீபிகா படுகோண், விஜய் சேதுபதி, யோகிபாபு, பிரியாமணி உள்ளிட்ட பலர் நடிக்கின்றனர். சமீபத்தில் கூட படத்தின் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் படத்தின் மீதான எதிர்பார்ப்பை அதிகரித்தது. இந்த படத்திற்கு அனிரூத் இசையமைக்கிறார்.

photo

தற்போதைய தகவல் படி இந்த படத்தில் நடிகை பிரியாமணி ஒரு முக்கியமான பாடலுக்கு நடனமாட உள்ளதாக செய்தி வெளியாகியுள்ளது. இதற்கு முன்பு கூட ‘சென்னை எக்ஸ்பிரஸ்’ படத்தில் ஷாருக்கானுடன் பிரியாமணி குத்தாட்டம் போட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

photo

photo

அதே போன்று கூட இந்த படத்திலும் குத்தாட்டம் போடலாம் என ரசிகர்கள் எதிர்பார்க்கின்றனர்.

Share this story