“வேற யாரு நம்ம அமலா ஷாஜிதான்”- வைரலாகும் பாடலாசிரியர் பிரியன் பேசிய வீடியோ!...

photo

பாடலாசிரியராக சூப்பர் ஹிட பாடல் வரிகளை கொடுத்து தற்போது நடிகராகவும், இயக்குநராகவும் அவதாரம் எடுத்துள்ளவர் பிரியன். இவர் இயக்கி நடித்துள்ள அரணம் படம் விரைவில் திரைக்காண உள்ளது. இந்த நிலையில் படத்தின் இசைவெளியிட்டு விழாவில் பேசிய அவரது பேச்சு வைரலாகி வருகிறது.

photo

“ 2 நிமிஷன் நடனமாட சென்னையில ஒரு பொண்ணு 50ஆயிரம் கேக்குது, அதே 30 செகண்ட் நடனமாட கேரளால ஒரு பொண்ணு 2 லட்சம் கேக்குது. அதுமட்டுமில்ல ஃபிளைட் டிக்கெட் போட்டு தருவீங்களான்னு வேற கேக்குது. ஏம்மா நானே ஃபிளைட்டுல போனதில்லமா.. என கூற யாரு அந்த பொண்ணுன்னு சொல்லுங்க என திரௌபதி பட இயக்குநர் மோகன் ஜி கூறுகிறார் , அது வேற யாரும் இல்ல நம்ம அமலா ஷாஜிதான்” என கூறியுள்ளார் பிரியன்.

பிரியனின் இந்த வீடியோ இணையத்தில் வைரலாக சிலர் அமலாவுக்கு ஆதரவாக குரல் கொடுக்க, சிலரோ இந்த வீடியோவை ட்ரெண்ட் செய்து பிரியனுக்கு ஆரதவு கரம் நீட்டி வருகின்றனர்.

Share this story