மயக்கும் மாயத்தோற்றத்தில் பிரியங்கா அருள் மோகன்... வைரல் புகைப்படங்கள் !

PriyankaArulMohan

 ஸ்டைலிஷ்ஷான லுக்கில் இருக்கும் புகைப்படங்களை பிரியங்கா அருள் மோகன் வெளியிட்டுள்ளார். 

PriyankaArulMohan

தென்னிந்தியாவில் இளம் நடிகையாக இருக்கும் பிரியங்கா அருள் மோகன், முன்னணி நடிகைகளுக்கு போட்டியாக வேகமாக வளர்ந்து வருகிறார். இதற்கு காரணம் அவரது அழகான தோற்றமும், சிறந்த நடிப்பும்தான். அதனால் தான் குறுகிய காலத்திலேயே முன்னணி ஹீரோக்களின் படங்களில் நடித்து வருகிறார். 

PriyankaArulMohan

முதன்முதலில் கன்னடத்தில் 'ஒந் கதே கெல்லா' என்ற திரைப்படத்தின் மூலம் கதாநாயகியாக அறிமுகமானார். அதன்பிறகு தெலுங்கில் நானி நடிப்பில் வெளியான 'கேங் லீடர்' படத்தில் நடித்து பிரபலமானார். இதையடுத்து தமிழில் சிவகார்த்திகேயனுடன் டாக்டர் மற்றும் டான், சூர்யாவுடன் எதற்கும் துணிந்தவன் ஆகிய படங்களில் நடித்துள்ளார்.  

PriyankaArulMohan

இதைத்தொடர்ந்து அடுத்தடுத்து புதிய படங்களில் ஒப்பந்தமாகி நடித்து வருகிறார். இந்நிலையில் க்யூட் லுக்கில் இருக்கும் புகைப்படங்களை நடிகை ப்ரியங்கா அருள் மோகன் வெளியிட்டுள்ளார். இந்த புகைப்படங்கள் ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது. 

PriyankaArulMohan

 

Share this story