பிறந்தநாள் கொண்டாடும் பிரியங்கா மோகன்... திரை நட்சத்திரங்கள் வாழ்த்து...

பிறந்தநாள் கொண்டாடும் பிரியங்கா மோகன்... திரை நட்சத்திரங்கள் வாழ்த்து...

தென்னிந்திய சினிமாவின் முக்கிய நடிகைகளில் ஒருவர் பிரியங்கா மோகன். தெலுங்கில் கேங்ஸ்டர் என்ற திரைப்படத்தின் மூலம் அவர் பிரபலமானார். நானியுடன் சேர்ந்து அவர் நடித்த அத்திரைப்படம் பெரிய ஹிட் அடித்தது. தமிழிலும் டப்பிங் செய்யப்பட்டு வெளியிடப்பட்டது. 

பிறந்தநாள் கொண்டாடும் பிரியங்கா மோகன்... திரை நட்சத்திரங்கள் வாழ்த்து...

இதைத் தொடர்ந்து தமிழில் சிவகார்த்திகேயனுக்கு ஜோடியாக டாக்டர் படத்தில் நடித்ததன் மூலம் கோலிவுட்டுக்கு அறிமுகமானார் பிரியங்கா மோகன். அதைத் தொடர்ந்து, சூர்யாவுடன் சேர்ந்து எதற்கும் துணிந்தவன் படத்தில் நடித்திருப்பார். இப்படத்தை பாண்டிராஜ் இயக்கியிருந்தார். இரண்டு திரைப்படங்களின் மூலமும் ரசிகர்களை கவர்ந்தவர் பிரியங்கா மோகன்.  தற்போது கேப்டன் மில்லர் திரைப்படத்தில் தனுஷூக்கு ஜோடியாக அவர் நடித்துள்ளார். இப்படத்தில் இதுவரை இல்லாத அளவு மாறுபட்ட வேடத்தில் அவர் நடித்து இருக்கிறார்.  இது தவிர ஜெயம்ரவி நடிக்கும் பிரதர் படத்திலும் அவர் நடித்து வருகிறார்

பிறந்தநாள் கொண்டாடும் பிரியங்கா மோகன்... திரை நட்சத்திரங்கள் வாழ்த்து...

இதனிடையே இன்று பிரியங்கா மோகன் தனது பிறந்தநாளை கொண்டாடி வருகிறார். அவருக்கு தமிழ் மற்றும் தெலுங்கு திரைப்பிரபலங்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். சமூக வலைதளங்களில் அவரது புகைப்படங்களை பகிர்ந்து வருகின்றனர்

Share this story