அக்டோபர் 10க்கு அப்புறம் கங்குவா தான் Talk of the town : தயாரிப்பாளர் தனஞ்செயன்
சூர்யா நடிப்பில் அடுத்ததாக திரையரங்குகளில் வெளியாக உள்ள திரைப்படம் ‘கங்குவா’. இதில் திஷா பதானி, பாபி தியோல், யோகி பாபு, ரெடின் கிங்ஸ்லி உட்பட பலர் நடித்துள்ளனர். யுவி கிரியேஷன்ஸ் மற்றும் ஸ்டூடியோ கிரீன் நிறுவனங்கள் இணைந்து தயாரிக்கும் இந்தப் படத்தை சிறுத்தை சிவா இயக்கியுள்ளார். வெற்றி பழனிச்சாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். தேவிஸ்ரீ பிரசாத் இசையமைத்துள்ளார்.3டியில் உருவாகும் இந்தப் படம் தமிழ், தெலுங்கு, இந்தி உட்பட 10 மொழிகளில் வெளியாக இருக்கிறது. இதில் இரண்டு கதாபாத்திரங்களில் சூர்யா நடிப்பதாக கூறப்படுகிறது. இப்படம் வரும் அக்டோபர் 10-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது. அண்மையில், இப்படத்தின் ட்ரெய்லர் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில், படம் குறித்து பேட்டியளித்த தயாரிப்பாளர் தனஞ்செயன், அக்டோபர் 10 கங்குவா வந்ததும் ஒரு மாசத்துக்கு Talk of the town அதுவா தான் இருக்கும். தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா மட்டுமல்ல.. World மொத்தமும் talk of the town ஆக கங்குவா படம் தான் இருக்கும் என தெரிவித்துள்ளார். இது ரசிகர்களிடையே எதிர்பார்பை அதிகரித்துள்ளது.
அக்டோபர் 10 கங்குவா வந்ததும் ஒரு மாசத்துக்கு Talk of the town அதுவா தான் இருக்கும். தமிழ்நாடு மட்டுமல்ல இந்தியா மட்டுமல்ல.. World மொத்தமும் talk of the town 👀🔥 - studio Green CEO#kanguva #Suriya
— Prakash Mahadevan (@PrakashMahadev) August 16, 2024
pic.twitter.com/wsrJ4U4LEs