செய்தியாளரிடம் சண்டை போட்ட தயாரிப்பாளர் தில் ராஜு
தெலுங்கு மொழியில் முன்னணி தயாரிப்பாளராக இருபப்வர் தில் ராஜூ. தற்போது அவர் ராம் சரண் நடிப்பில் உருவாகும் கேம் சேஞ்சர் படத்தை இயக்கி வருகிறார். அவர் தெலுங்கு மொழி தயாரிப்பாளராக இருந்தாலும், கோலிவுட் திரையுலகிலும் அவர் பிரபலம். அதற்கு காரணம் அவர் விஜய் நடித்த வாரிசு படத்தின் தயாரிப்பாளர் ஆவார். வம்சி இயக்கிய இப்படத்தில் நடிகர் விஜய் நாயகனாக நடித்திருந்தார். தமிழ் மற்றும் தெலுங்கு மொழிகளில் வாரிசு திரைப்படம் வெளியானது. இதில் சரத்குமார், ஷ்யாம் உள்பட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடத்திருந்தனர்.
Dil Raju Garu fights with Media Peroson 😦
— Christopher Kanagaraj (@Chrissuccess) January 9, 2024
pic.twitter.com/G89TpaZ2cG
இந்நிலையில், படத்தின் வெளியீடு தொடர்பான பிரச்சனை ஒன்றில், பிரபல தயாரிப்பாளர் தில் ராஜூ செய்தியாளர்களிடம் பிரச்சனையில் ஈடுபட்டுள்ளார். அவரை அடிக்க முயன்ற காணொலி இணையத்தில் வைரலாகி வருகிறது.