சூர்யா, கார்த்தி படம் குறித்து அப்டேட் கொடுத்த தயாரிப்பாளர்.. ரசிகர்கள் உற்சாகம்...

producer

‘சூர்யா 45’ மற்றும் கைதி 2 படம் குறித்த அப்டேட்-ஐ  தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபு தெரிவித்துள்ளார்.  

ஆர்.ஜே.பாலாஜி இயக்கத்தில் சூர்யா, த்ரிஷா உள்ளிட்ட பலர் நடித்து வரும் படத்தை ட்ரீம் வாரியர் நிறுவனம் பெரும் பொருட்செலவில் தயாரித்து வருகிறது.இந்நிலையில், நேற்று நடைபெற்ற ‘மெட்ராஸ் மேட்னி’ படத்தின் பத்திரிகையாளர் சந்திப்பில், தயாரிப்பாளர் எஸ்.ஆர்.பிரபுவிடம் ‘சூர்யா 45’ குறித்து கேள்வி எழுப்பபட்டது. அதற்கு  'சூர்யா 45’ படத்தின் படப்பிடிப்பு இன்னும் ஒரு வாரத்தில் முடிந்துவிடும். ஜூன் 2-வது அல்லது 3-வது வாரத்தில் இருந்து விளம்பரப்படுத்தும் பணிகள் தொடங்கும்.
‘சூர்யா 45’ திரைப்படம் ஒரு கொண்டாட்டமாக இருக்கும். ஆகையால் ஒரு பண்டிகை தினத்தில் வெளியிடவுள்ளோம். அது தொடர்பான அறிவிப்புகள் எல்லாம் வெளியாகும்” என்று தெரிவித்தார்.karthi

இதனைத் தொடர்ந்து ‘கைதி 2’ குறித்தும் அவரிடம் கேள்வி கேட்கப்பட்டது. அதற்கு “‘கைதி 2’ படம் ஒரு மாதத்திற்கு முன்பே அறிவிக்கப்பட்டு பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. அடுத்ததாக கார்த்தி - ‘டாணாக்காரன்’ தமிழ் படத்தை தொடங்கவுள்ளோம். அது முடிந்தவுடன் ‘கைதி 2’ தொடங்கும். இந்த ஆண்டு இறுதியில் தொடங்க திட்டமிட்டு இருக்கிறோம்” என்று பதிலளித்துள்ளார் எஸ்.ஆர்.பிரபு.

Share this story