‘விஜய்’க்கு அவ்வளவுதான் மரியாதை- தயாரிப்பாளர் கே.ராஜன் காட்டம்.

photo

செய்தியாளர்களை சந்தித்து பேசிய தயாரிப்பாளர் கே.ராஜன் வாரிசு- துணிவு தியேட்டர் ஒதுக்கீடு, தெலுங்கில் வாரிசு பட  விவகாரம் ஆகியவை குறித்து பேசியுள்ளார்.

அஜித், விஜய் இருவரும் பவர்ஃபுல் ஹீரோக்கள். இருவரின் படங்களும் சமமான திரைகளில் வெளியாகும்.விஜய்யின் வாரிசு படம் தமிழகத்தில் ரிலீஸ் ஆகிறது, அதே போல தெலுங்கிலும் ரிலீஸ் ஆகிறது. ஆனால் பாலகிருஷ்ணா படம் தமிழில் ரிலீஸ் ஆகவில்லையே. அதனால் அங்குள்ள போட்ட முதலீட்டை காப்பாற்ற வேண்டும் என்று அங்குள்ள தயாரிப்பாளர் சங்கம் நினைக்கிறது. ஆந்திராவில் `வாரிசு' 35% ரிலீஸாகும். விஜய்க்கு அவ்வளவு தான் அங்கு மரியாதை' என கூறியுள்ளார்.

photo

தொடர்ந்து பேசிய அவர் நடிகர் விஜய் இங்கு வாங்கிய சம்பளத்தை விட தெலுங்கு தயாரிப்பாளர் 25% உயர்த்தி கொடுத்துள்ளார். ஏன் அப்படி செய்தார்? அவரை வைத்து தமிழ் தயாரிப்பாளர் படம் எடுக்கும்போது இவ்வளவு பெரிய தொகையை அவருக்கு எங்களால்  கொடுக்க முடியுமா? என கேள்வி எழுப்பியுள்ளார்.

photo

மேலும் பேசிய அவர் பொங்கலுக்கு இரண்டு பெரிய ஹீரோக்கள் படம் வருவது ரசிகர்களுக்கு கொண்டாட்டம் தான். பேட்டையும், விஸ்வாசமும் ஒன்றாக ரிலீசானது. இந்த ரெண்டு படங்களும் நன்றாக ஓடியது. கைதி, பிகில் படம் இரண்டு ஒன்றாக ரிலீஸ் ஆனது. அந்த படங்களும் நன்றாக ஓடியது. இந்த பொங்கலுக்கு விஜய் படம், அஜித் படங்களும் நன்றாக ஓடும். எங்களுக்கு எல்லா ரசிகர்களும் ஆதரவு தருகிறார்கள். ஆந்திராவை கொண்டு இங்கே சேர்க்காதீர்கள். அங்கு தமிழ் ஹீரோக்கள் போனதே முதலில் தவறு. தமிழ் சினிமாப் பட தயாரிப்பாளரை காப்பாற்றுங்கள். நீங்கள் போய் தெலுங்கு சினிமாவிற்கு சென்று காப்பாற்ற வேண்டிய அவசியம் இல்லை. அவர்கள் அங்கு நன்றாக தான் இருக்கிறார்கள். தமிழ் தயாரிப்பாளர்களுக்கு தமிழ் ஹீரோக்கள் நன்றாக ஒத்துழைப்பு தர கற்றுக் கொள்ளுங்கள் என காட்டமாக தெரிவித்துள்ளார்.

photo

Share this story