பிரபல தயாரிப்பாளர் 'ஆனந்தி பிலிம்ஸ்' நடராஜன் காலமானார்
1738406853930

தயாரிப்பாளர் 'ஆனந்தி பிலிம்ஸ்' நடராஜன் உடல்நலக் குறைவால் காலமானார்.
முன்னணி இயக்குநர்களான மகேந்திரன், பாரதிராஜா போன்றவர்களோடு பணியாற்றியவர் நடராஜன். நடராஜன் தயாரிப்பில்தான் இயக்குநர் மகேந்திரன் சினிமாவில் அறிமுகமானார் என்பது குறிப்பிடத்தக்கது. ரஜினி – மகேந்திரன் கூட்டணியில் உருவான 'முள்ளும் மலரும்' திரைப்படத்தின் தயாரிப்பாளர் நடராஜன். இவர் உத்தம புருஷன், ராஜா கைய வச்சா, தர்ம சீலன், பங்காளி, பசும்பொன், சின்ன கவுண்டர் உள்ளிட்ட படங்களை தயாரித்துள்ளார். கடந்த சில நாட்களாகவே உடல்நிலை சரியில்லாமல் இருந்திருக்கிறார் நடராஜன். திடீரென நேற்று இரவு மாரடைப்பு ஏற்பட்டுக் காலமாகியிருக்கிறார். நடராஜனின் மறைவிற்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்