'வீர தீர சூரன்' படம் குறித்து தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் நெகிழ்ச்சி..

veera dheera sooran

விக்ரம் நடிப்பில் உருவாகி உள்ள 'வீர தீர சூரன்' படம் குறித்து தயாரிப்பாளர் ஷிபு தமீன்ஸ் நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார். 

 
சித்தா’ பட இயக்குனர் அருண் குமார் இயக்கத்தில் விக்ரம் அவரது 62-வது படமாக ’வீர தீர சூரன்' படத்தில்
நடித்துள்ளார். இப்படத்தில் எஸ்.ஜே.சூர்யா, சுராஜ் வெஞ்சராமுடு, சித்திக், துஷரா விஜயன் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். ரியா ஷிபு தயாரித்துள்ள இப்படத்திற்கு ஜி.வி.பிரகாஷ் இசையமைத்துள்ளார்.


மதுரையை கதைக்களமாக கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இப்படத்தின் டீசர் சில மாதங்களுக்கு முன் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. மேலும், கல்லூரும் மற்றும் ஆத்தி அடி ஆத்தி ஆகிய பாடல்கள் வெளியாகி ரசிகர்களை கவர்ந்தது.   ’வீர தீர சூரன்' படம் மார்ச் 27 ஆம் தேதி வெளியாகவுள்ளது. இந்நிலையில், திரைப்படம் தணிக்கை குழுவிற்கு அனுப்புவதற்கு முன் படத்தை இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் பார்த்துள்ளனர்.


இதை தயாரிப்பாளர் அவரது எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளார் அதில் அவர் கூறியதாவது " மிகவும் சந்தோஷமான தருணம், இயக்குனர் எஸ்.யு அருண்குமாருக்கு நன்றி. திரைப்படம் மிகவும் அற்புதமாக வந்து இருக்கிறது. ராவான கல்ட் கமெர்ஷியல் திரைப்படமாக இது இருக்கும், உங்கள் எல்லோரையும் மார்ச் 27 ஆம் தேதி திரையரங்கிள் சந்திப்பதற்கு மிகவும் ஆவலுடன் காத்துக்கொண்டு இருக்கிறேன்" என பதிவிட்டுள்ளார். 

Share this story