ஜப்பானில் வெளியாகும் மாநாடு திரைப்படம் - தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தகவல்

நடிகர் சிம்பு நடிப்பில் வெளியான மாநாடு திரைப்படம் ஜப்பானில் வெளியாகும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இயக்குனர் வெங்கட் பிரபு இயக்கத்தில் நடிகர் சிம்பு நடிப்பில் கடந்த 2021ம் ஆண்டு வெளியான திரைப்படம் ’மாநாடு. தொடர் தோல்வி படங்களால் துவண்டு இருந்த சிம்புவிற்கு இந்த திரைப்படம் திருப்புமுனையாக அமைந்தது. இப்படத்தில் சிம்புவுடன் கல்யாணி பிரியதர்ஷன், எஸ்.ஏ.சந்திரசேகர், எஸ்.ஜே.சூர்யா, மனோஜ் பாரதிராஜா, பிரேம்ஜி, ஒய்.ஜி.மகேந்திரன் உள்ளிட்ட பலர் நடித்திருந்தார்கள்.டைம் லூப் கதையம்சம் கொண்ட இந்தத் திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பு பெற்றது. வசூல் ரீதியாகவும் இந்த படம் மிகப்பெரிய சாதனை படைத்தது. மேலும் இந்த படத்தில் சிம்பு மற்றும் எஸ்.ஜே.சூர்யாவின் நடிப்பு பாராட்டுகளை பெற்றது.
நல்ல படம் என்பது ஒரு அழகிய பறவை போல. கண்டம் கடந்தும் நேசிக்கப்படும். #மாநாடு தற்போது ஜப்பானில் மே மாதம் வெளியாக உள்ளது. இந்த லூப் ஹோல் திரைக்கதை ஜப்பானியர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது @SilambarasanTR_ @vp_offl @iam_SJSuryah @thisisysr… https://t.co/IZV7tvX9AT
— sureshkamatchi (@sureshkamatchi) April 8, 2025
இந்நிலையில், மாநாடு திரைப்படம் விரைவில் ஜப்பானில் வெளியாகவுள்ளதாக அப்படத்தின் தயாரிப்பாளர் சுரேஷ் காமாட்சி தெரிவித்துள்ளார். இது தொடர்பான அவரது எக்ஸ் பதிவில், "நல்ல படம் என்பது ஒரு அழகிய பறவை போல. கண்டம் கடந்தும் நேசிக்கப்படும். மாநாடு தற்போது ஜப்பானில் மே மாதம் வெளியாக உள்ளது. இந்த லூப் ஹோல் திரைக்கதை ஜப்பானியர்களின் மனதைக் கொள்ளை கொள்ளும் என்ற நம்பிக்கை உள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.