‘அட்லீ’யை ஓரம் கட்டும் தயாரிப்பாளர்கள் – பிளானை மாற்றும் ‘விஜய்’.

photo

பிரபல இயக்குநராக வலம் வரும் அட்லீயை தயாரிப்பாளர்கள் ஓரம் கட்டுவதாக செய்திகள் வெளியாகியுள்ளது.

photo

அட்லீ  தற்போது  ஷாருக்கானை வைத்துஜவான்படத்தை இயக்கி வருகிறார். இவர் இயக்கும் படங்கள் ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. அந்த வகையில் அட்லீ இயக்கத்தில் வெளியான முதல் இரண்டு படங்கள் நல்ல லாபத்தை பெற்று தந்தன, அனால் அடுத்தடுத்து வெளியான மெர்சல், பிகில் படங்கள் நல்ல விமர்சனத்தை பெற்றாலும் கூட தயாரிப்பு நிறுவனத்திற்கு லாபத்தை தர தவறின. இதற்கு காரணம்  பட்ஜெட்டை மீறி, பணத்தை வீண் விரையம் செய்த அட்லீ  தான் என சொல்லப்பட்டது.

photo

அதையேதான் தற்போது அவர் இயக்கும் ‘ஜவான்’ படத்திற்கும் செய்து வருகிறாராம், இதனால் டென்ஷனான ஷாருக்கான் படத்திற்காக எவ்வளவு வேண்டுமானாலும் செலவு செய்ய தயார், ஆனால் பயனுள்ளதாக இருக்க வேண்டும், வீண் விரயம் செய்ய கூடாது, பல பொருட்கள் வாடகைக்கு எடுக்கப்பட்டு பயன்படுத்தமலே உள்ளது என கடிந்துள்ளார். இது ஒரு புறம் இருக்க  இந்த படத்தை தொடர்ந்து விஜய் நடிப்பில் அவரது 68வது படத்தை இயக்க இருந்த அட்லீயை பல பெரிய தயாரிப்பு நிறுவனங்கள் ஓரம் கட்டுகிறார்களாம். அதற்கு காரணம் அவர் சொன்ன பட்ஜெட்டை விட  அதிகமாக செலவு செய்து நஷ்டத்தை ஏற்படுத்துவார் என்பதால் தான்.

விஜய், வேறு இயக்குநர்களுடன் கைகோர்த்தால் தயாரிக்க தயார் ஆனால் அட்லீ என்றால் பின்வாங்குகிறார்கள் தயாரிப்பளர்கள். இந்த விஷயம் விஜய்க்கு தெரியவர தன்னை நம்பி கோடிகளில் முதலீடு செய்யும் தயாரிப்பாளர்களுக்கு தன்னால் எந்த நஷடமும் வந்துவிட கூடாது என்பதற்காக அவரது அடுத்த படத்தை இயக்கும் வாய்பை அட்லீக்கு  தரமறுப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Share this story